News February 15, 2025
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திப்பு

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மண்ணை பூர்வீகமாக கொண்டவருமான நல்லகண்ணுவை மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் வினோஜ் செல்வம் ஆகியோருடன் தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 22, 2025
BREAKING: தூத்துக்குடியில் கனமழை – கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்றுதிருவைகுண்டம் அணைக்கட்டினை பார்வையிட்டு அலுவலர்களை தொடர்ந்து அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கட்டு அதன் சுற்றியுள்ள குளம் மற்றும் ஏரிகளை ஆய்வு செய்தார்.
News November 22, 2025
தூத்துக்குடி: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க: இங்கு <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


