News January 24, 2025
தூத்துக்குடி கடற்கரையை காக்க களமிறங்கிய மாணவர் படை

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, ஈஎஃப்ஐ(Environmental Foundation of India) மற்றும் வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் இணைந்து முத்துநகர் கடற்கரையில் நேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கடற்கரை தூய்மை பணியை மேற்கொண்டனர். 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முத்து நகர் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News December 13, 2025
தூத்துக்குடியில் அனைத்து ரயில்களும் ரத்து

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில்வே ஸ்டேஷன் முதல் தூத்துக்குடி ரயில்வே நிலையம் வரை இரட்டை இரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் வரும் 15ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதனால், தூத்துக்குடி ரயில் நிலையம் வரும் அனைத்து ரயில்களும் வரும் டிச.21 முதல் டிச.23 வரை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

தூத்துக்குடி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தண்டனை

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 10 வயது சிறுமியை தாளமுத்துநகரை சேர்ந்த நிர்மல் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நிர்மல்குமார் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதில், நிர்மல் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


