News June 25, 2024
தூத்துக்குடி எம்.பி. ஆக பதவியேற்றார் கனிமொழி

18ஆவது மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி இன்று 2வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார். நடந்து வரும் 2ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தூத்துக்குடி தொகுதியில், கனிமொழி 5,40,729  வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை விட 3.92 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Similar News
News November 4, 2025
தூத்துக்குடி மக்களே இந்த தேதியை NOTE பண்ணுங்க

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவை இணைந்து மாதம் தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ. 7 அன்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <
News November 3, 2025
கோவில்பட்டி: திருக்கல்யாண திருவிழா நாளை துவக்கம்

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை (4) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி திருவனந்தல் பூஜை போன்றவை நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவில் கொடி பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.


