News March 3, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 23, 2025
தூத்துக்குடி தவெக மாவட்ட செயலரை அறிவித்த விஜய்

கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே தவெக மா.செக்களை அறிவிக்காமல் இருந்தது. இன்று பனையூர் அலுவலகத்தில் மா.செக்களை தவெக தலைவர் விஜய் அறிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட செயலர் நியமனம் குறித்து அதன் நிர்வாகி அஜிதா ஆக்னல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலராக சாமுவேலை நியமனம் செய்து விஜய் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
தூத்துக்குடி: இனி உங்க PAN கார்டு செல்லாது?

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 23, 2025
தூத்துக்குடியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம்.


