News April 23, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Similar News
News April 23, 2025
தூத்துக்குடி அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 -24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News April 23, 2025
மினி பஸ்களை இயக்க இன்றே கடைசி நாள்

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் புதிதாக 13 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் இன்று மாலைக்குள் புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தனது செய்தில் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News April 23, 2025
அரசு பேருந்து ஓட்டுனருக்கு 6 மாதம் சிறை

தூத்துக்குடி கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அரசு பேருந்து ஓட்டுனரான முடிவைத்தானேந்தலை சேர்ந்த முருகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.