News January 25, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து காவல் துறை அதிகாரிகள் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன24) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
தூத்துக்குடியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 17, 2025
தூத்துக்குடி: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் https://trb.tn.gov.in/ -ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News October 17, 2025
திருச்செந்தூர் கோவிலில் 4,600 போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் கௌதம் தலைமை வகித்து கலந்து கொண்டார். கந்த சஷ்டி திருவிழாவில், 4,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.