News September 13, 2024

தூத்துக்குடி ஆசிரியர்கள் 2 பேர் பலி

image

மதுரையில் நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்க துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா பேரிலோவன் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Similar News

News November 14, 2025

தூத்துக்குடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்

image

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமான பட்டினமருதூரில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணியில் தொன்மையான பல்வேறு மண்பாண்ட சிதைவுகள், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கட்டிடங்களின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இயற்கை பிசின்கள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

தூத்துக்குடியில் அரசு வேலைக்கு நீங்கள் ரெடியா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சாகர் மித்ரா சேவை ஊழியர்கள் பல்வேறு கிராமங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 35 வயது நிறைவடையாத மீன்வளம் மற்றும் கடல் உயிரினம், விலங்கியல் பாடத்தில் பட்டப் படிப்பு படித்த வாலிபர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை உதவி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!