News March 29, 2024
தூத்துக்குடி அருகே 6 பேர் கைது

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News September 19, 2025
அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான, ஓராண்டு அர்ச்சகர்பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை www.tiruchendurmurugantemple.tnhrce.in இணையதளத்திலும், திருக்கோயில் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சேர்க்கை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
தூத்துக்குடி: ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7-8% ஆகும். <
News September 18, 2025
தூத்துக்குடி: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க..

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.