News August 10, 2024
தூத்துக்குடி அருகே மாணவன் மயங்கி விழுந்து பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மகேந்திரன் என்ற மாணவன் சனிக்கிழமை மதியம் இடைவேளையில் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் அவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News November 23, 2025
BREAKING தூத்துக்குடி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.