News April 26, 2025

தூத்துக்குடி அருகே புதிய காற்றழுத்த சுழற்சி

image

தமிழகத்தில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய காற்றழுத்த சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உங்கள் பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.

Similar News

News November 20, 2025

தூத்துக்குடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை?

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்.இவரது 21 வயது மகளான லோகேஸ்வரி என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை

image

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் கோவில் புனிதத்தை பாதிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களை பாடுவது, நடனம் ஆடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்றவைகளில் ஈடுபடக்கூடாது. இதனையும் மீறி ஈடுபடுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

73 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன. இதனை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!