News April 20, 2024
தூத்துக்குடியில் 66.88% வாக்குகள் பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1624 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 468 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 66.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
தூத்துக்குடி, திருச்செந்தூர் DSP-க்கள் மாற்றம்
திருச்சுழி DSP-ஆக இருந்த ஜெயநாதன் கோவில்பட்டி DSP-க்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் DSP யோகேஷ் குமார் திருச்செந்தூர் DSP-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் DSP வசந்த ராஜ் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக DSP பொன்ராமு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவில்பட்டி DSP வெங்கடேஷ் வள்ளியூருக்கு மாற்றம்.
News November 20, 2024
இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் இன்று(நவ.,20) அதிகாலை குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக 44 பண்டல்களில் 1500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரானை திருச்சியை சேர்ந்த பிரகாஷையும் கைது செய்தனர்.
News November 20, 2024
தூத்துக்குடியில் மழை தொடரும்!
தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.