News April 8, 2024

தூத்துக்குடியில் 534 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்த 534 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக நேற்று ஆட்சியரின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 94 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News April 20, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 19, 2025

தூத்துக்குடி:மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி

image

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து இம்மாதம் 25ஆம் தேதி முதல் மே  மாதம் 15-ஆம் தேதி வரை இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தடகளம் கைப்பந்து கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஹாக்கி மட்டும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அணுக ஆட்சியர் இளாம்பகவத் இன்று கேட்டுள்ளார்.

error: Content is protected !!