News August 15, 2024
தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று (ஆக.15) திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பழுதாகி நின்ற ஒரு படகை சோதனை இட்டனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 60 பண்டல்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 4 பேருக்கு சிறை

கடந்த 2015-ம் ஆண்டு குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாசரேத்தைச் சேர்ந்த தினேஷ், இசக்கிமுத்து, ஸ்டாலின், ஹைகோர்ட் துரை ஆகிய 4 பேரை குலசேகரப்பட்டினம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 4 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
தூத்துக்குடி: தேர்வு இப்போ இல்லை.. கலெக்டர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை., திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய 9 வட்டங்களில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.17-லும், ஜன.2 முதல் நேர்முக தேர்வும் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இலம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE
News November 26, 2025
61 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 61 மனுக்கள் வர பெற்றன. இதனை ஆய்வு செய்த எஸ்பி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


