News April 12, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைவிற்கு நாள் கூட்டம் ஏப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
தூத்துக்குடி: B.E படித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

தூத்துக்குடி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 19, 2025
தூத்துக்குடி: ஒரே நாளில் இரண்டு பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் போலீசாரல் கைது செய்யப்பட்டார். இதைப்போல் ஆறுமுகநேரியில் ஒரு கொலை வழக்கில் பெருமாள் புரத்தைச் சேர்ந்த இசக்கி முத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பரிந்துரை செய்ததை அடுத்து இரண்டு பேரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
News November 19, 2025
BREAKING: தூத்துக்குடி கார் விபத்தில் 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் ராகுல், ஜெபஸ்டின், முகிலன் நேற்று இரவு இவர்கள் கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகே வந்து கொண்டிருந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில், மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர். இது சம்பந்தமாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


