News September 14, 2024
தூத்துக்குடியில் வருவாய் ஆய்வாளர்கள் மாற்றம்

தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக விருது பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், முதுநிலை வருவாய் அலகில் உள்ள ஆய்வாளர்கள் 24 பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவர் அஜய் சீனிவாசன் நேற்று(செப்.13) உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 16, 2025
பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பாஜக கண்டனம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இச்செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

தூத்துக்குடி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சியில் டிசம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வல்லநாடு, கலியாவூர், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்தடை ஏற்படும். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கூறியுள்ளார்.


