News April 15, 2025
தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கள தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 20 பேர் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-29 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News November 12, 2025
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு

தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகளுக்கு மாவட்ட வாரியாக அரசு பரிசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தூத்துக்குடி மாவட்ட சிறந்த பள்ளியாக தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி, டுவிபுரம் திருமண்டல நடுநிலைப்பள்ளி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
News November 12, 2025
BREAKING தூத்துக்குடிக்கு எச்சரிக்கை விடுத்த ஆய்வு மையம்

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களி; இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
தூத்துக்குடியில் ஆய்வுக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையிலான சட்டப்பேரவை பொது கணக்கு குழுவின் ஆய்வு கூட்டம் இன்று கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சில அலுவல் காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


