News April 16, 2025
தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
Similar News
News November 30, 2025
தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News November 30, 2025
தூத்துக்குடி: வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து

கோவில்பட்டி பகுதியில் புதுடில்லியை சேர்ந்தவர் மாலிக். இவர் கோவில்பட்டியில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது அறையில் பாடலை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை இவரது அறையில் தங்கியிருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் தட்டி கேட்டதுடன் மாலிக்கை கத்தியால் குத்தியுள்ளார். இது சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர்.
News November 30, 2025
தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


