News March 28, 2025
தூத்துக்குடியில் மள்ளர் மீட்பு கழக தலைவர் கைது

கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மது போதையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளச்சி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். *ஓர் அமைப்பு தலைவரின் இச்செயல் பற்றி உங்கள் கருத்து?
Similar News
News April 4, 2025
இந்த ஆலயத்தின் அன்னாபிஷேகம் சாப்பிட்டால் மகப்பேறு!

கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்தது சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில். மற்ற முருகன் ஆலயங்களை போல் இல்லாமல் இந்த ஆலயத்தில் மூலவராக வேல் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த ஆலயத்தில் கிருத்திகை நட்சத்திர நாளன்று மூலவரான வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அண்ணா அபிஷேகத்தை க்கு ஏங்குபவர்கள் சாப்பிட்டால் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
News April 4, 2025
மூன்று அணிகளாக த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் த.வெ.க பொறுப்பாளர் அஜிதா தலைமையில் முதலில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அதே இடத்தில தவெக பிரமுகர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜ் அணியினரும், அதனையடுத்து முருகன் அணியினர் என மூன்று அணியினர் இன்று தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
News April 4, 2025
செண்பகவல்லியம்மன் கோவில் நாளை கொடியேற்றம்

கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை (ஏப்.5) காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.