News August 8, 2024
தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 10ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைத்து நடைபெறும் இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் பரிசீலிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் 44 பவுன் நகை திருட்டு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள வந்திருந்த கோட்டாறு அறநிலையத்துறை செயல் அலுவலர் கவிதாவின் 10 பவுன் தங்க நகையும், திருச்சி புத்தூரை சேர்ந்த மீனா என்பவரிடம் 20 பவுன் தங்க நகையும், மேலும் 3 பெண்களிடம் 14 பவுன் தங்கை நகையும் என 44 பவுன் தங்க நகை திருடு போய் உள்ளது. இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 9, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் நெல்லை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <
News July 9, 2025
தூத்துக்குடியில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு <