News April 2, 2025
தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 7, 2026
தூத்துக்குடி: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2271143 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 7, 2026
தூத்துக்குடி: பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.
News February 7, 2026
தூத்துக்குடி துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு தொடக்கம்

தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுமதி இல்லா ட்ரான்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் வகையில் இந்த அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறை என்பதால் இந்த பெருமை தூத்துக்குடியைச் சாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


