News April 2, 2025

தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 19, 2025

தூத்துக்குடி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை. இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை உறுதி!

image

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக கருங்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நைனார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், கீழப்பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடக்கு-தெற்கு காரசேரி, அனவரதநல்லூர், நாட்டார்குளம், கிளாக்குளம் ஆகிய பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவாதம் அளித்தார். SHARE

News September 19, 2025

அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான, ஓராண்டு அர்ச்சகர்பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை www.tiruchendurmurugantemple.tnhrce.in இணையதளத்திலும், திருக்கோயில் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சேர்க்கை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!