News April 4, 2025
தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 2, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 2, 2025
தூத்துக்குடியில் பைக், கார் ஏலம்… காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தபட்ட 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்கள் வரும், நவ. 11ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் கோரம்பள்ளத்தில் உள்ள எஸ் பி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இந்த வாகனங்களை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை பார்வையிடலாம் என எஸ் பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
News November 2, 2025
தூத்துக்குடியில் இன்று ரோந்து பணி காவலர்கள் விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 01.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்கள் அட்டவணையில் குறிப்பிடபட்டுள்ளது.


