News April 7, 2025
தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
சிபிஐ எம்எல் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

சிபிஐஎம்எல் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில் மத்திய கமிட்டி பார்வையாளர் மைத்ரேயி தலைமையில் புதிய மாநில கமிட்டி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் 65 பேர் புதிய மாநில கமிட்டி உறுப்பினர்களாகவும், மாநிலச் செயலாளராக பழஆசை தம்பி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
News December 15, 2025
தூத்துக்குடி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 15, 2025
தூத்துக்குடி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பரிவர்த்தனைகள் பற்றி தெரிஞ்சுக்க இனி அடிக்கடி வங்கிக்கோ (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank: 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகளை தெரிஞ்சுக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


