News April 14, 2025

தூத்துக்குடிக்கு எஸ்ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபரை தென்பாகம் எஸ்ஐ முத்தமிழ் அரசன்  தாக்கியதாகவும், அதனால் வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 16, 2025

தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

News April 16, 2025

தூத்துக்குடி மாவட்டத்தின் இராணுவ கிராமம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி கிராமத்தினை ராணுவ கிராமம் என்று கூறுகின்றனர். வீட்டுக்கு ஒருவர் இங்கு இராணுவத்தில் பணிபுரிகிறார்கள், சுமார் 3500 பேர் ராணுவம், துணை ராணுவம், காவல் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர். ராணுவத்தில் சேருவதற்காக இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க 

News April 16, 2025

தூத்துக்குடி பயணிகளுக்கு குட் நியூஸ்

image

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறையை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ ஜிபே, போன்பே போன்ற பரிவர்த்தனை செய்தோ டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

error: Content is protected !!