News April 1, 2025
தூக்கமின்றி தவித்து வாலிபர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (27)இவருக்கு அடிக்கடி தூக்கத்தில் கெட்ட கனவு வந்துள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊர் மேல் அழகியான் காட்டுப்பகுதியில் தூக்கு போட்டு முயற்சித்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
தென்காசி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ. 21) நடைபெற உள்ளது. 8th, முதல் ஏதவது ஒரு டிகிரி, ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சம்பளம் ரூ.25,000 வரை வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <
News November 20, 2025
செங்கோட்டை விரைவு ரயில்: வழித்தடங்களில் மாற்றம்

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 22, 23, 24, 25 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
News November 20, 2025
தென்காசி: போக்சோ கைதி சிறையில் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிறை குளியல் அறையில் தான் அணிந்திருந்த விலங்கில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


