News March 30, 2025

துறையூர் அருகே வலிப்பு நோயால் கிணற்றில் விழுந்தவர் பலி

image

துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Similar News

News April 5, 2025

தோஷங்கள் தீர்க்கும் மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில்

image

துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம் எனக்கூறப்படும் ஆம்ரவனேசுவரர் கோயில் திருச்சி மாந்துறையில் உள்ளது. இது 1800 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள சிவன் சுயம்புவாய் தோன்றியவர் என கூறப்படுகிறது. இங்குள்ள சிவனை வணங்கினால் திருமண தடை, தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் என அனைத்தும் தீரும் என கூறப்படுகிறது. நாம் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி இங்கு வந்து வழிபட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

News April 5, 2025

வேலைவாய்ப்பு மோசடி: காவல்துறையை எச்சரிக்கை

image

வேலைவாய்ப்பு மோசடி கொடுத்து திருச்சி மாவட்ட காவல்துறையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்
நிறுவனம் பற்றிய நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், வேலை வாய்ப்பு உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் வரை உங்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
தேவையற்ற சலுகைகள், முன்பணம் செலுத்த சொல்வது, நடைமுறைக்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

News April 5, 2025

பெண்களுக்கான இலவச எலக்ட்ரிக் ஆட்டோ பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி தகுதி: 8ம் வகுப்பு, வயது: 18 முதல் 40வயது வரை உள்ள பெண்கள். மாதம் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானத்தில், 100% வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, வரும் 16/04/25 தேதி கடைசி நாள். தொடர்புக்கு: 8903363396

error: Content is protected !!