News March 22, 2024

துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆட்சியர்

image

தேனி மாவட்டம் அல்லிநகரம் வள்ளி நகர் பகுதியில் இன்று 22.03.2024 வெள்ளிக்கிழமை வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும்‌ திருநங்கைகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை அடுத்து அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News December 7, 2025

தேனி: ஆதார் கார்டில் முகவரி மாற்றம் இனி FREE!

image

தேனி: மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1. இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2. அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3. அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4. முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5. புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News December 7, 2025

தேனி: கஞ்சா கடத்திய அண்ணன் – தங்கை கைது!

image

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் நேற்று முன் தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 7 பேரை பிடித்து விசாரித்ததில் ஓடிசாவில் இருந்து பெரியகுளத்திற்கு 22.840 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷ்பானி, இவரது தங்கை ஜோஸ்னாபானி மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News December 7, 2025

தேனி: அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல்!

image

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் கண்ணன்(42). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழனிசெட்டிபட்டியை சோ்ந்த சிவக்குமாரிடம், கண்ணன் ரூ.1 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 15 மாதங்களில் அசல் வட்டியாக மொத்தம் ரூ.1.50 லட்சம் திரும்பக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தன்னிடம் அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கண்ணன் அளித்த புகாரில் தேனி போலீசார் சிவக்குமார் மீது கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

error: Content is protected !!