News June 27, 2024
துணை வேந்தருக்கு வழங்கபட்ட பதவி

தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.
Similar News
News November 25, 2025
CM ஸ்டாலின் இன்று கோவை வருகை

செம்மொழிப் பூங்கா திறப்பு கள ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.25) கோவை வருகிறாா். பின், செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடுகிறாா். தமிழக காப்புத்தொழில் உருவாக்க மையம் நடத்தும் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகிறாா்.
News November 25, 2025
மூளை காய்ச்சல்: கோவை மக்களே உஷார்

கேரள மாநிலத்தில் மூளை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரன் நேற்று விடுத்த அறிக்கையில் மாசடைந்த (அ) தேங்கியிருக்கும் தண்ணீரில் உள்ள அமீபாக்கள் மூக்கின் மூலமாக சென்று மூளையை தாக்கி காய்ச்சலை உண்டாக்கும். இதனால் பொதுமக்கள் மற்றும் கேரளா செல்லும் பக்தர்கள் தேங்கி இருக்கும் நீரில் குளிக்கும்போது மூக்கை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
News November 25, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (24.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


