News April 3, 2025
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை ஆடியோ

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லோகநாதன், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News December 3, 2025
வேலூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு

திருவண்ணாமலை மகா தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க (டிச.2) முதல் (டிச.5) வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூரிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக, இலகு ரகவாகனங்கள் அனைத்தும் வேலூர், கண்ணமங்கலம், திருவண்ணாமலை வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாறாக அனைத்து வாகனங்களும் வேலூர் ஆற்காடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 3, 2025
வேலூர்: மின்வேலியால் தந்தை, மகன்கள் பலியான பரிதாபம்!

வேலூர்: ஒடுகத்தூர், ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (டிச.1) வயலுக்கு வைத்திருந்த வேலியால் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் ஜானகிராமன் (55), விக்காஸ் (25), ஜீவா (22) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் வயலுக்கு மின்வேலி அமைத்த அதே பகுதியை சேர்ந்த சங்கரை (52) இன்று கைது செய்தனர்.
News December 3, 2025
வேலூர்: இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிச.02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


