News September 14, 2024
துணை வட்டார கமாண்டருக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு டெபுட்டி ஏரியா கமாண்டர் பணிக்கான காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தெரிவித்துள்ளார். 21 வயதில் இருந்து 50 வயதுக்குள் உள்ள பட்டபடிப்பு படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கவுரவ பதவி என்பதால் ஊதியம் எதுவும் வழங்கப்படாது. விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விபரத்தை 25ம் தேதிக்குள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
Similar News
News December 6, 2025
உதகை அருகே அதிரடி தடை

உதகையை அடுத்த அவலாஞ்சிப் பகுதியில் வனப் பகுதியை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் வனத் துறை அனுமதி இல்லாமல் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக, வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், வனத் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். உள்ளாட்சி அமைப்பிடம் மட்டும் விண்ணப்பித்திருப்பதும் மற்ற துறையிலும் அனுமதி வாங்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிப்பு
News December 6, 2025
குன்னுார்: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு அதிரடி தீர்ப்பு!

குன்னுார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருவங்காட்டில் உள்ள இசை பயிற்சி பள்ளியில் கடந்த, 2023 ஆண்டு நவ., மாதம் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அங்கு இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் 52, என்பவர் சிறுமியுடன் பழகி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஊட்டி மகிளா கோர்ட் பிரசாந்த்க்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
News December 6, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு முதல் இன்று காலை (டிச.6) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


