News January 1, 2025
துணைநிலை ஆளுநருக்கு சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்து

புதுச்சேரி மணவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான செல்வம் இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பொன்னாடை போத்தி, பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News July 8, 2025
10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

புதுவை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
புதுவையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

புதுவை எம்.ஜி.ஆர்.நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (ஜூலை 9) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 10) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் மூலக்குனம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், பாலாஜி நகர், ஜெயாநகர், ரெட்டி யார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படுமென கூறப்பட்டுள்ளது.
News July 8, 2025
85 ஆண்டுகளுக்குப் பின் கோயில் கும்பாபிஷேகம்!

புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது.1940ம் ஆண்டு 2வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.