News January 1, 2025
துணைநிலை ஆளுநருக்கு சபாநாயகர் புத்தாண்டு வாழ்த்து

புதுச்சேரி மணவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான செல்வம் இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பொன்னாடை போத்தி, பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News November 7, 2025
காரைக்கால்: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
புதுவை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி!

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: பல்வேறு
3. கல்வித் தகுதி: Diploma in Instrumentation Engineering.
4.சம்பளம். ரூ.25,000/-
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <<-1>>CLICK செய்க.<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 7, 2025
புதுவை: 4 பேருக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக இருந்த பணியிடங்கள் போட்டித் தோ்வு வாயிலாக நிரப்பப்பட்டன. முதன்மை தோ்வுப் பட்டியலில் இருந்தவா்களில் சிலா் பணியில் சேரத் தவறியதால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப காத்திருப்புப் பட்டியலில் உள்ளவா்களைக் கொண்டு 4 போ் பணியில் நியமிக்கத் தோ்வு செய்யப்பட்டனா். நான்கு தீயணைப்பு வீரா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவையில் வழங்கினார்


