News April 18, 2025
துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.
Similar News
News February 23, 2026
வாணியம்பாடியில் துடிதுடித்து பலி

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த நபரின் உடலை மீட்டு ஆலங்காயம் போலீசார் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News February 23, 2026
பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.