News April 6, 2025
தீரா நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர் 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக உருவாக்கினார். அதில் ஒருவர் தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். இங்குள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. ஆகவே இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை, அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். அதற்குமாறாக 5 ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். இங்கு வழிபட்டால் அம்மை நோய் மற்றும் தீரா நோயும் தீரும் எனக்கூறப்படுகிறது.
Similar News
News November 3, 2025
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ( பத்தாம் வகுப்பு தோல்வி முதல் பட்டப் படிப்பு வரை ) உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News November 3, 2025
தஞ்சை: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், மதுக்கூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை (4/11/2025) காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே போல் நாளை மறுநாள் (5/11/2025) ஒக்கநாடு கீழையூர், மாரியம்மன் கோயில், வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்திலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க


