News April 13, 2025
தீராத நோய் தீர்க்கும் கந்தர்மலை முருகன் கோவில்

காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. நாளை தமிழ் புத்தாண்டுடை ஒட்டி இக்கோயிலுக்கு சென்று இங்குள்ள குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும். மேலும் குளத்தின் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 28, 2025
கிருஷ்ணகிரி: குடும்ப பிரச்சனை – ஜோதிடருக்கே வந்த வினை!

கிருஷ்ணகிரி: பர்கூர், வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் திருப்பதி (35). ஜோதிடரான இவருக்கு, குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திருப்பதி மிகுந்து மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
கிருஷ்ணகிரி தேர்தல் பணியாளர்கள் கௌரவிப்பு

நேற்று (நவ-27)ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100% (எஸ்ஐஆர்) கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த சிறப்பான பணியை நிறைவேற்றிய 9 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
News November 28, 2025
கிருஷ்ணகிரியில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்த்தில் இன்று (நவ.28) மாதாந்திர பணிகள் நடைபெறவுள்ளது. அதனால், தொழில் பேட்டை, பவர் ஹவுஸ், சந்தப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன்நகர், பழைய பேட்டை, கே ஆர் பி டேம், சுண்டே குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.


