News April 15, 2025
தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
Similar News
News December 12, 2025
கோவை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News December 12, 2025
கோவை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News December 12, 2025
மேட்டுப்பாளையம் அருகே சோகம்!

கடலூர் மாவட்டம் தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்(22). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார் பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


