News March 17, 2025

தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர்

image

சென்னை திருவான்மியூரில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. தீராத நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து விபூதி பிரசாதம் உண்டால், தீராத நோய்கள், பாவங்கள் தீரும் அங்குள்ள வன்னி மரத்தை சுற்றி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 19, 2025

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் இல்லை – தமிழக அரசு

image

சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று (மார்.19) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை.பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது எனவும் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது எனவும் காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவு

News March 19, 2025

நாய்களுக்கு வாய் மூடி இல்லாவிட்டால் அபராதம்

image

சென்னையில் உள்ள நாய் வளர்பவர்களுக்கான கவனத்திற்கு! வளர்ப்பு நாய்களை பொது இடங்களில் அழைத்து வரும் போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் 1,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு.சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான விதிமுறைகளை மாநகராட்சி கடுமையாக்க உள்ளது.

News March 19, 2025

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னையில் ரூ.2000 பஸ் பாஸ் பெற்று இனி ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.மேலும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 225 ஏசி மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ரூ.1000 பாஸ் மட்டுமே இருந்து வந்தது.ஆனால் அதில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது.

error: Content is protected !!