News April 15, 2025
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
விருதுநகரில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார். தரம் உயர்த்தப்பட்ட பந்தல்குடி காவல் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றார். இதேபோல் மம்சாபுரம், ஆலங்குளம், கீழராஜகுலராமன், சிவகாசி நகர், எம்.புதுப்பட்டி, சாத்தூர் தாலுகா, வீரசோழன், ஏழாயிரம்பண்ணை ஆகிய காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 3, 2025
அருப்புக்கோட்டை: GH கட்டிடம் விரைவில் திறப்பு

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 3, 2025
விருதுநகரில் 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா?

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருச்சுழி பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 7.60 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 6.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


