News April 29, 2025
தீமைக்கு எதிராய் போராடுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே!
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

கிருஷ்ணகிரி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<
News November 17, 2025
கிருஷ்ணகிரி: சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ் ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர் மஞ்சுநாத். மஞ்சுநாத் நடந்து சென்றபோது, அவரைப் பழிவாங்கும் நோக்குடன் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவன் ஒருவன் உட்பட 4 பேரை ஒசூர் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
News November 17, 2025
கிருஷ்ணகிரி: ஆசிரியர் தகுதி தேர்வு 1,327 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
ஆசிரியர் தகுதி தேர்வு 2 நாட்கள் நடந்தன. நேற்று, (நவ.16) 2ம் தாளிற்கான தேர்வு நடந்தது. இதற்கு மாவட்டத்தில் மொத்தம்,10,657 பேர் விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி, பர்கூர், எலத்தகிரி, சூளகிரி, குந்தாரப்பள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் மொத்தம்,34 மையங்களில் நடந்த தேர்வில் 9,330 பேர் தேர்வு எழுதிய நிலையில் 1,327 பேர் பங்கேற்கவில்லை.


