News October 24, 2024
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகை மற்றும் தொடர்விடுமுறை வருவதால் 28.10.2024 முதல் 30.10.2024 வரை சென்னையில் இருந்து மதுரைக்கு 355 பேருந்துகளும், தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 02.11.2024 முதல் 04.11.2024 வரை சென்னைக்கு 280 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
மதுரை: கோழி கடையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

மதுரை ஆனையூரை சேர்ந்த சண்முகம் மகன் விஜய்(29) பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பகுதி நேரமாக கோழி கடையில் வேலை பார்த்து வந்தார். கோழி கடையில் இன்று வேலை பார்த்து போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 22, 2025
மதுரை: திருமணத்திற்கு மறுத்த மகளுக்கு கத்தி குத்து

விருதுநகரை சேர்ந்த ரமேஷ் மகள் பிரியங்கா(24). நர்சிங் முடித்த இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய, தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை ஒருவரை காதலிப்பதாக கூறினார். பிரியங்காவை அவனியாபுரத்தில் உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து தந்தை ரமேஷ், அண்ணன் பாலமுருகன் சேர்ந்து அவரை தாக்கி கத்தியால் குத்தினர். அவனியாபுரம் போலீசார் ரமேஷை(51) இன்று கைது செய்தனர். பாலமுருகனை தேடி வருகின்றனர்.
News December 22, 2025
மதுரை: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் சூப்பர் வேலை!

மதுரை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <


