News October 24, 2024
தீபாவளி: கோவையில் இரவு 1 மணி வரை அனுமதி

கோவை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவையில் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனால் தீபாவளியையொட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
Similar News
News November 17, 2025
கோவை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 17, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமலாகிறது. அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 17, 2025
மருதமலை வருகை தந்த பிரபல நடிகர்!

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது .இங்கு நேற்று நடிகர் சந்தானம் வருகை வந்தார். பின்னர் பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம், சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அவர் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்ட பக்தர்கள் சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


