News May 15, 2024
தி.மலை: வெங்காய மூட்டைகளை இறக்குவதில் சிக்கல்

தி.மலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பைபாஸ் சாலையில் காய்கறி மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இன்று(மே 15) மொத்த விற்பனை கடைகளுக்கு வந்த வெங்காய மூட்டைகளை லாரியிலிருந்து இறக்குவதில் கூழி தொகையை உயர்த்தி கேட்டதால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வெங்காய மூட்டைகளை லாரியிலிருந்து இறக்காமல் உள்ளனர்.
Similar News
News November 8, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 7, 2025
தி.மலை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.


