News October 11, 2025
தி.மலை: ரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணக்குருக்கையை சேர்ந்தவர் கண்ணன். இருசக்கர வாகனத்தில் நேற்று (அக்.10) பாச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த இவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பாச்சல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
தி.மலை விவசாயிகளே உங்களுக்கு குறையா? உடனே தெரிவிக்கலாம்!

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் வரும் டிச. 9ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.