News March 27, 2024
தி.மலை: முதியவர் மீது கொடூர தாக்குதல்

போளூர் அடுத்த சந்தவாசல் விளக்கங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற முதியவரை அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் சதீஷ் மற்றும் சுதா ஆகியோர் தங்கள் ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு பங்கு பணம் கேட்டு முதியவர் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மூர்த்திசந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்சங்கர், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
தி.மலை: நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளம் ரூ.13,000. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் 24.11.2025 க்குள் தேவையான ஆவணங்களுடன் சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
News November 16, 2025
தி.மலை: வெடிகுண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

செங்கம், மேல் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (10) தாயுடன் கால்நடை மேய்ச்சலுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, காட்டுப்பன்றி வேட்டைக்காக மர்ம நபர்கள் வீசி சென்ற நாட்டு வெடிகுண்டை சிறுவன் எடுத்து பார்த்தபோது, குண்டு வெடித்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு தி-மலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜிப்மருக்கு மாற்றப்பட்டார்.
News November 16, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (15.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


