News February 17, 2025
தி.மலை: முதல்வர் காக்கும் கரங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி வரை கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் விளக்கம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
தி.மலை: சிறுமியிடம் அத்துமீறல்-கம்பி எண்ணும் காமுகன்!

போளூர், பேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார் (40) இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். நேற்று (நவ.20) தி.மலை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News November 21, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.