News January 22, 2025

தி. மலை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

தி.மலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா அமைப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News October 16, 2025

தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.16) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, ஸ்ரீ பிரியங்கா மஹால்-தி.மலை, கணேசர் திருமண மண்டபம்-செங்கம், நாடக மேடை அருகில்-சித்ராகவூர், எஸ்.எஸ்.மஹால்-கோவிலூர், சமுதாயக்கூடம்-சிறுவளூர் மற்றும் கேசவன் மண்டபம்-ராஜன்தாங்கல் ஆகிய இடங்களில் நடைபெறும். ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News October 16, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (15.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

ஆரணி அரசு பொது மருத்துவமனையில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (அக்.15) உங்களைத் தேடி உங்கள் ஊரில் நடைபெற்றது. திட்டத்தின் கீழ் ஆரணி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான வசதிகள், மருந்து வழங்கல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

error: Content is protected !!