News March 18, 2024
தி.மலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தி.மலை, ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் சந்தேகத்திற்கிடமாக ரூ. 1 லட்சம் மேல் பரிவர்த்தனை மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 22, 2025
தி.மலை: இலவச பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

திருவண்ணாமலை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 22, 2025
தி.மலை: வேகமெடுக்கும் தீபத் திருவிழா ஏற்பாடுகள்!

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவை நவ.24-ல் தொடங்கவுள்ள நிலையில், 4,764-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு 20% கூடுதல் பேருந்துகளும், பெருமளவு பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் & 130 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 15,000 போலீசார், 1,000-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


