News March 26, 2025
தி.மலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் வரும் 2030 ஆண்டிற்குள் தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் 5000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
தி.மலை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தி.மலை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
தி.மலையில் பயங்கர தீ விபத்து!

திருவண்ணாமலை: காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பூர கடையில் நேற்று(நவ.26) இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த கடைகள் மற்றும் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
News November 27, 2025
தி.மலை: பெண்ணின் சேலையில் பற்றி எரிந்த தீ!

அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றும் இடத்தில் நேற்று(நவ.26) பெண் ஒருவரின் சேலையில் திடீரென தீப்பற்றி சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவர் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


