News November 25, 2024
தி.மலை: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. முகாமுக்கு, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Similar News
News November 16, 2025
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (15.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
நாளை வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையம் செயல்படும்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025 தொடர்பாக, படிவம் பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
News November 15, 2025
தி.மலை: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு APPLY NOW!

தி.மலை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <


