News August 10, 2024

தி.மலை பள்ளி மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மீட்பு

image

திருவண்ணாமலையைச் சார்ந்த மூன்று மாணவர்கள் பள்ளியில் நடந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் மாணவர்களை கண்டித்துள்ளனர். இதனால், பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட மூன்று பேரும் அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளனர். அவ்வாறு வந்த மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் பகுதியில் சுற்றித் திரிந்த போது கூடுவாஞ்சேரி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

Similar News

News October 31, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

செங்கை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நாளை (அக்.31) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

செங்கல்பட்டில் கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.01 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை11.00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தவும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக விளம்பரப் பலகைகள் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!